நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் சிவகாமி அம்மன் உடனுறை நடராஜர் சன்னதியில் ஆனி திருமஞ்சனம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு சிவகாமி அம்மன் நடராஜர் உற்சவமூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதன்பின், காலை 10:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிவகாமி அம்மன், நடராஜர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. 11:30 மணியளவில் சுவாமிகள் கோவில் பிரகாரம் வலம் வந்தனர். அப்போது ராஜகோபுரம் கதவுகள் மூடி திறக்கப்பட்டது.
அதன்பின், உற்சவமூர்த்திகள் எழுந்தருள மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.