ADDED : ஜூன் 16, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் நவாப் ஜாமிஆ பள்ளிவாசலில், பக்ரீத் சிறப்பு தொழுகை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலம் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பொதுச் செயலாளர் சேட்டு முகம்மது அறிக்கை:
பக்ரீத் பெருநாளை முன்னிட்டு நாளை (17ம் தேதி) விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் காலை 6:30 மணிக்கு சிறப்பு பயான் சொற்பொழிவு, 7:00 மணிக்கு சிறப்பு தொழுகை நடக்கிறது. எனவே, அனைவரும் முன்கூட்டியே வந்து தொழுகையில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.