/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாரதிதாசன் மன்றத்தில் கண்ணதாசன் பிறந்த நாள்
/
பாரதிதாசன் மன்றத்தில் கண்ணதாசன் பிறந்த நாள்
ADDED : ஜூன் 30, 2024 06:30 AM

கடலுார் : கடலுார் புதுப்பாளையத்தில் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா நடந்தது.
மன்றத் தலைவர் கடல் நாகராஜன் தலைமை தாங்கினார். துர்கா தனிப்பயிற்சி கல்லுாரி முதல்வர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். மன்ற செயலாளர் கலைச்செல்வி வரவேற்றார். மண்டலக்குழு தலைவர் சங்கீதா செந்தில்முருகன் விழாவை துவக்கி வைத்தார்.
கண்ணதாசன் படத்திற்கு ஆறுமுகம், கோபிநாத் மாலை அணிவித்தனர். கடல் நாகராஜன் எழுதிய 'பூவுக்குள் ஒரு புதையல்' என்ற நுாலை திருவள்ளூர் மாவட்ட நீதிபதி கிருஷ்ணசாமி வெளியிட்டார். முதல் பிரதியை முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி பெற்றுக் கொண்டார். மருதவாணன், சிங்காரம், வெற்றிச்செல்வி, கணேசன் வாழ்த்திப் பேசினர்.
அண்ணாமலை நன்றி கூறினார்.