ADDED : ஜூன் 15, 2024 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் மணலுாரில் உள்ள விருதை விகாஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், உலக ரத்த கொடையாளர் தின விழா கடைபிடிக்கப்பட்டது.
விழாவிற்கு, பள்ளி தாளாளர் ஆசாத் அலி தலைமை தாங்கினார். சி.இ.ஓ., கதிரொளி அருண் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார்.
இதில், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், ரத்தானம் அளிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், ஜாதி, மத பாகுபாடின்றி ரத்ததானம் செய்ய வேண்டும் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.