ADDED : ஜூலை 14, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : வடலுாரை சேர்ந்த 16 வயது சிறுவன், கடலுார் ஐ.டி.ஐ.,யில் படித்து வந்துள்ளார். இவர், நெல்லிக்குப்பம் அடுத்த நத்தப்பட்டை சேர்ந்த 16 வயதுடைய பெண்ணை காதலித்தார். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு, அந்த பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார்.
இதுபற்றி பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, சிறுவனை கைது செய்து, கடலுார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். சிறுமியை மருத்துவ பரிசோதனை பிறகு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.