/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் மருத்துவமனையில் கலெக்டர் திடீர் விசிட்
/
சிதம்பரம் மருத்துவமனையில் கலெக்டர் திடீர் விசிட்
ADDED : ஜூலை 25, 2024 06:05 AM

சிதம்பரம்: சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், திடீரென ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கள ஆய்வு மேற்கொண்டார். நேற்று காலை சிதம்பரம் வந்த கலெக்டர், நகராட்சி பள்ளி, 25 கோடியில் நடைபெறும் வெளிவட்ட சாலை பணிகள், அண்ணாமலை நகர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, திடீரென சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குள் சென்றார். அங்கு மருந்தகம், ரத்த சுத்திகரிப்பு பிரிவு, வளர் இளம் பெண் குழந்தைகள் சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார், தொடர்ந்து சமையலறைக்கு சென்ற அவர், இடத்தை சுகாதாரமாக வைத்திருக்க வலியுறுத்தினார். கலெக்டர் திடீர் வருகையை எதிர்பார்க்காத, அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் செய்வது அறியாத திகைத்துப் போயினர்.
ஒரு வழியாக சமாளித்து அவரது கேள்விகளுக்கு பதில் அளித்தனர், இதனால் அங்கு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.