/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., அண்ணாமலை மீது போலீசில் காங்., புகார்
/
பா.ஜ., அண்ணாமலை மீது போலீசில் காங்., புகார்
ADDED : ஜூலை 14, 2024 04:06 AM

கடலுார், : தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகையை ரவுடி என கூறிய பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில், காங்., கட்சியினர் புகார் அளித்தனர்.
கடலுார் வட்டார காங்., சார்பில், அதன் தலைவர் சீத்தராமன் தலைமையில், பஞ்சாயத்து ராஜ் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், இளைஞர் காங்., செயல் தலைவர் கோபிநாத் உள்ளிட்ட நிர்வாகிகள், கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில், தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகையை, பா.ஜ., தலைவர் அண்ணாமலை ரவுடி குற்றவாளி என கூறியுள்ளார். எனவே, அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதனை பெற்றுக்கொண்ட கூடுதல் எஸ்.பி., பிரபாகரன், உரிய நடவடிகை எடுக்கப்படும் என தெரிவித்தார். உடன் மாவட்ட நிர்வாகிகள் செல்வகுமார், ஜெயபால், நடராஜன், சுந்தர்ராஜன், வெங்கடபதி, நடராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.