ADDED : ஜூலை 25, 2024 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த வில்லியநல்லுாரில் பவர் பாய்ஸ் அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர் தலைமை தாங்கினார்.
ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள் முன்னிலை வகித்தனர். கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பாண்டியன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.
விழாவில், கொத்தட்டை ஊராட்சி துணைத் தலைவர் விஜயராஜா, முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், கவுன்சிலர் வசந்தி சுதந்திரதாஸ், ஜவகர் உட்பட பலர் பங்கேற்றனர்.