/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியீடு போலீஸ் ஸ்டேஷனில் மாணவி தர்ணா
/
சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியீடு போலீஸ் ஸ்டேஷனில் மாணவி தர்ணா
சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியீடு போலீஸ் ஸ்டேஷனில் மாணவி தர்ணா
சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியீடு போலீஸ் ஸ்டேஷனில் மாணவி தர்ணா
ADDED : ஜூன் 14, 2024 05:49 AM
விருத்தாசலம்: சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் மாஜி காதலன் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கல்லுாரி மாணவி, போலீஸ் ஸ்டேஷனில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த ஆத்துக்குறிச்சியை சேர்ந்தவர் நடராஜமூர்த்தி மகன் ஜெயக்குமார்,25; இவரும் கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த 22 வயது பி.பார்ம் கல்லுாரி மாணவியும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜெயக்குமாரின் நடவடிக்கை சரியில்லாததால், அவருடன் பழகுவதை மாணவி தவிர்த் துள்ளார். அதில் ஆத்திரமடைந்த ஜெயக் குமார், மாணவியுடன் இருந்த புகைப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதனை அறிந்த மாணவி, ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசாரிடம் கடந்த 25ம் தேதி புகார் அளித்தார். புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், ஜெயக்குமார் தொடர்ந்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
அதிருப்தியடைந்த மாணவி, மகளிர் போலீசார் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், எஸ்.பி., உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அவர்களிடம் மகளிர் போலீசார், புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.