/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி மருங்கூர் அகழாய்வில் வட்ட சில்லுகள் கண்டெடுப்பு
/
பண்ருட்டி மருங்கூர் அகழாய்வில் வட்ட சில்லுகள் கண்டெடுப்பு
பண்ருட்டி மருங்கூர் அகழாய்வில் வட்ட சில்லுகள் கண்டெடுப்பு
பண்ருட்டி மருங்கூர் அகழாய்வில் வட்ட சில்லுகள் கண்டெடுப்பு
ADDED : ஜூலை 10, 2024 05:16 AM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த மருங்கூர் அகழாய்வில், வட்ட சில்லுகள் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மருங்கூர் கிராமத்தில் அகழாய்வு பணி கடந்த மாதம் 18ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. அகழாய்வு இயக்குனர் சிவானந்தம் தலைமையில் அகழாய்வு பொறுப்பாளர்கள் பாக்கியலட்சுமி, சுபலட்சுமி ஆகியோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அகழாய்வில், கி.பி.10 அல்லது 11ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் கால செப்பு நாணயம் கடந்த 1ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த அகழாய்வில் நேற்று வட்ட சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வட்ட சில்லுகள் பானை ஓடு வடிவில் பல்வேறு அளவுகளில் உள்ளன. வட்ட சில்லுகள் கண்டறியப்பட்டுள்ளதன் வாயிலாக தற்போது அகழாய்வு செய்யப்படும் இடம் வாழ்விட பகுதிதான் என்பதை உறுதிசெய்கிறது என, அகழாய்வாளர்கள் தெரிவித்தனர்.