ADDED : ஜூன் 30, 2024 04:59 AM
கடலுார் : கடலுாரில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடந்தது.
கடலுார் மாவட்ட ஹாக்கி விளையாட்டு சம்மேளனம் சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டிகள் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
போட்டியை மாநகராட்சி மேயர் சுந்தரி துவக்கி வைத்தார். போட்டியில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் 12 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் நாக்கவுட் முறையில் நடந்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு மாலையில் நடந்த விழாவில் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கடலுார் மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, ஓய்வு பெற்ற பேராசிரியர் தமிழாழி கொற்கைவேந்தன், ஹாக்கி கிளப் துணைத் தலைவர் சதீஷ்குமார், செயலாளர் ரமேஷ், பொருளாளர் சபரிநாதன், துணை செயலாளர் ஜெயசூரியன், நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், ரத்தினவேல், ராமச்சந்திரன் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.