/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்த விவசாயிகள் விருதை ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
/
என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்த விவசாயிகள் விருதை ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்த விவசாயிகள் விருதை ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
என்.எல்.சி.,க்கு நிலம் கொடுத்த விவசாயிகள் விருதை ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூன் 16, 2024 06:20 AM

விருத்தாசலம்: என்.எல்.சி., சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள், விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம், கோபாலபுரம், முத்துகிருஷ்ணாபுரம் கிராமங்களில் கடந்த 2000ம் ஆண்டில், என்.எல்.சி., இரண்டாம் சுரங்க விரிவாக்கப் பணிக்கு விவசாயிகளிடம் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்திய நிலத்திற்க உரிய இழப்பீடு, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என, என்.எல்.சி., நிர்வாகத்தை கண்டித்து, கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கம்மாபுரம், கோபாலபுரம், முத்துகிருஷ்ணாபுரம் விவசாயிகள் இணைந்து, விவசாய தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, 5 முதல் 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர் இழப்பீடாக, தற்போது வழங்குவதுபோல இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்.
விவசாயிகளை வகைப்படுத்தாமல், அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். 1 லட்சத்து 9 ஆயிரம் வாழ்வாதார தொகையை வாங்காத, வாங்கிய விவசாயிகளுக்கும் 17 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி கம்மாபுரத்தில் வரும் 18ம் தேதி கவன ஈர்ப்பு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். பின்னர், ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத்திடம் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.