ADDED : ஜூன் 29, 2024 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம், பி.எஸ்.எஸ்.ஸ்மார்ட் கல்வி மையம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் விருத்தாசலத்தில் நடந்தது.
முகாமை சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் மணிகண்டராஜன் துவக்கி வைத்தார்.
டாக்டர் சுவப்னா தலைமையில், செவிலியர் சீதா, சந்தியா ஆகியோர் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
நிகழ்ச்சியில், பானுமதி, ஸ்டாலின், மேலாளர் சரவணகுமார், மணிபாலன் லட்சுமி, அனிதா உட்பட பலர் பங்கேற்றனர்.