ADDED : ஜூன் 30, 2024 05:34 AM
சிறுபாக்கம், : சிறுபாக்கம் அருகே ஓடும் அரசு பஸ்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
திட்டக்குடி அடுத்த கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமர் மனைவி காளியம்மாள். நிறைமாத கர்ப்பிணியான இவர், மாதந்தோறும் மங்களூர் வட்டார அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பரிசோதனைக்காக, மங்களூர் வட்டார அரசு மருத்துவமனைக்கு கொரக்கவாடியில் அரசு பஸ்சில் ஏறினார்.
பஸ் சிறுபாக்கம் அடுத்த கொத்தனூர் அருகே சென்றபோது, காளியம்மாளுக்கு வலி ஏற்பட்டதால், பஸ் டிரைவர் வெங்கடாசலம் மற்றும் கண்டெக்டர் ராஜமாணிக்கம் ஆகியோர், அரசு பஸ்சை சாலையோரம் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு, மூதாட்டி ஒருவர் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில், ஆண் குழந்தை பிறந்தது.
பின், 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையுடன் காளியம்மாள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.