/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
/
புவனகிரி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
புவனகிரி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
புவனகிரி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ADDED : ஜூலை 15, 2024 02:29 AM

புவனகிரி: புவனகிரி ரோட்டரி சங்க புதிய நிர்வாகி பதவி ஏற்பு, 8 ம் ஆண்டு துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு சங்கத் தலைவர் சேஷாத்திரி வரவேற்றார். நிர்வாக செயலர் விஜய்பிரபு இறை வாழ்த்துப் பாடினார். சாசனத் தலைவர் சுதர்சன் ஆண்டறிக்கை வாசித்தார்.
புதிய தலைவராக ஆர்.வி.பி., மருத்துவமனை நிர்வாகி டாக்டர் கதிரவன், செயலாளராக முருகன் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ராமலிங்கம், பொருளாளராக ஸ்ரீ பாலாஜி ஆயில் மில் உரிமையாளர் சரவணன் ஆகியோருக்கு, மாவட்ட ஆளுநர்(தேர்வு) வைத்தியநாதன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
துணை ஆளுநர் ஆரோக்கியதாஸ், ஆர்.வி.பி., மருத்துவமனை இணை நிறுவனர் ஹேமலதாவீரபாண்டியன், இயற்கை வாழ்வியல் ஆலோசகர் ஞானசுந்தரபாண்டியன் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் ரூ.1.15 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முன்னாள் சிதம்பரம் நகராட்சி சேர்மன் தலைவர் நிர்மலாசுந்தர், ராஜேஸ்வரி சில்க்ஸ் சண்முகம், நளினி சில்க்ஸ் லலிதாசேஷாத்திரி, ஜெயக்கிருஷ்ணா டெக்ஸ் சந்தோஷ், விஜய் கம்யூர்ட்டர் விஜய்பிரபு, ஓம்சக்தி டிரேடர்ஸ் சுரேஷ்குமார், சுகன் சூப்பர் பஜார் சுதர்சன், ராக்ஸ் ஜிம் ,எச்.டி.எப்.சி., வங்கி செல்வக்குமார், ஒன்ஸ் பாட் இன்சூரன்ஸ் கிருஷ்ணராஜ், புவனகிரி மசலா நிர்வாக இயக்குனர் வினோத்குமார். அன்புசிமென்ட் ஒர்க்ஸ் அருள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியை டாக்டர் செல்வராஜ் தொகுத்து வழங்கினார். புதிய உறுப்பினராக டாக்டர் மங்களேஸ்வரன் இணைந்தார். சங்க புதிய தலைவர் டாக்டர் கதிரவன் ஏற்புரை நிகழ்த்தினார்.
செயலாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.