
நெல்லிக்குப்பம் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், நெல்லிக்குப்பம் நகராட்சி அம்மா உணவகத்தை கமிஷனர் ஆய்வு செய்து, சீர் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் செயல்படும் அம்மா உணவகத்தில் 12 பேர் பணியாற்றினர். ஆனால், தற்போது 3 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். மாவு அறைக்கும் கிரைண்டர் மற்றும் பிரிட்ஜ் பழுதாகியது.
இதனால், ஊழியர்கள் சிரமப்படுவதாகவும், அம்மா உணவகத்தால் பொதுமக்களுக்கு போதிய பலன் கிடைக்கவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதையடுத்து, நேற்று காலை கமிஷனர் கிருஷ்ணராஜன் திடீர் ஆய்வு செய்தார்.
அதையடுத்து கிரைண்டர் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, விதிமுறைக்கு உட்பட்டு பணியாளர்கள் நியமனம் செய்யபடுவார்கள் என கூறினார். இன்ஜினியர் வெங்கடாஜலம், துப்புரவு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் பூபாலன் உடனிருந்தனர்.