/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்; மாவட்டத்தில் 22ம் தேதி துவக்கம்
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்; மாவட்டத்தில் 22ம் தேதி துவக்கம்
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்; மாவட்டத்தில் 22ம் தேதி துவக்கம்
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்; மாவட்டத்தில் 22ம் தேதி துவக்கம்
ADDED : ஜூலை 23, 2024 12:04 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், வரும் 22ம் தேதி துவங்கி, 26 வரை நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் கடலுார், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, மேல்புவனகிரி, குமராட்சி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம், விருத்தாசலம், மங்களூர், நல்லுார் ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், மக்களுடன் முதல்வர் முகாம், வரும் 22ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரையில் நடக்கிறது.
683 கிராம ஊராட்சிப் பகுதிகளில், கடந்த 11ம் தேதி முதல் 19 வரையில் நடந்த முகாம்களில் 8,578 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. அடுத்து 22ம் முதல் 26ம் தேதி வரை 9 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமில் பட்டா மாற்றம், பட்டா உட்பிரிவு, நில அளவீடு-அத்து காண்பித்தல், வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் அனைத்து வகையான சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து உதவித் தொகைகள், குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், பெயர் மாற்றம், பயிர் கடன்கள், கறவை மாட்டு கடன், விவசாய நகைக்கடன், மாற்றுத் திறனாளிகள் கடன்கள் போன்றவைகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.