/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.1 லட்சம் திருடியவர் கைது எஸ்.பி., தனிப்படை அதிரடி
/
ரூ.1 லட்சம் திருடியவர் கைது எஸ்.பி., தனிப்படை அதிரடி
ரூ.1 லட்சம் திருடியவர் கைது எஸ்.பி., தனிப்படை அதிரடி
ரூ.1 லட்சம் திருடியவர் கைது எஸ்.பி., தனிப்படை அதிரடி
ADDED : ஜூன் 16, 2024 06:23 AM

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அருகே பூட்டியிருந்த வீட்டில் 1 லட்சம் ரூபாய் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை அடுத்த எம்.பரூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிவேலன், 31. பேக்கரியில் கேஷியராக பணிபுரிகிறார். இவர், தனது பெற்றோருடன் கடந்த 8ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, விருத்தாசலத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்தார். 13ம் தேதி வந்து பார்த்தபோது, வீடு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 1 லட்சம் பணம் திருடுபோயிருந்தது.
மணிவேலன் புகாரின் பேரில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். மேலும், கைரேகை சோதனையில், பழைய குற்றவாளியான எம்.பரூரை சேர்ந்த தெற்கு தெரு கண்ணுசாமி மகன் ஆனந்தகுமார், 39, என்பவருடையது என தெரிந்தது.
எஸ்.பி., ராஜாராம் தனிப்படை போலீசார், ஆனந்தகுமாரை மடக்கிப் பிடித்து, மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் முன்னிலையில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.