/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டிற்கும் முக்கியத்தும் நகராட்சி பள்ளி அசத்தல்
/
விளையாட்டிற்கும் முக்கியத்தும் நகராட்சி பள்ளி அசத்தல்
விளையாட்டிற்கும் முக்கியத்தும் நகராட்சி பள்ளி அசத்தல்
விளையாட்டிற்கும் முக்கியத்தும் நகராட்சி பள்ளி அசத்தல்
ADDED : ஜூலை 25, 2024 05:51 AM

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கல்வியோடு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். தலைமையாசிரியர் தேவனாதன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆரோக்கிய சுந்தரராஜ், அருணசிந்துஜா ஆகியோர் மாணவ மாணவிகளை விளையாட்டின் மீது ஆர்வம் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இப்பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் மாவட்ட அளவில் பங்கேற்ற கோப்பைகளை குவித்து வருகின்றனர். 16 பேர் கொண்ட கைப்பந்து அணி மாவட்ட அளவில் பரிசு பெற்றுள்ளது. அதேபோல், அண்ணாகிராமம் குறுவட்ட அளவில் நடந்த போட்டிகளில் கைப்பந்து, எறிபந்து, வாலிபால், வலையபந்து, டேபிள் டென்னிஸ் உட்பட பல விளையாட்டுகளில் இப்பள்ளி மாணவர்கள் பரிசுகளை குவித்தனர்.
வலையபந்து போட்டியில் மாணவர் கங்காசேகரன், சிலம்பத்தில் மாணவர் விஜயன், மாணவி ஜெயஸ்ரீ ஆகியோர் பரிசு பெற்றுள்ளனர். தொடர்ந்து மாணவ மாணவிகள் படிப்புடன் விளையாட்டிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்க்கம் இம்மாணவர்களுக்கு பாராட்டு குவிகிறது.