/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாஜி காங்., எம்.எல்.ஏ.,விற்கு சிலை த.மா.கா., நிர்வாகி இருவர் உண்ணாவிரதம்

ADDED : ஜூன் 14, 2024 06:24 AM

கடலுார்: மறைந்த காங்., முன்னாள் எம்.எல்.ஏ., சீனுவாச படையாட்சியாருக்கு சிலை அமைக்கக்கோரி, கடலுாரில் த.மா.கா., நிர்வாகிகள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுாரில் காங்., முன்னாள் எம்.எல்.ஏ., சீனுவாச படையாட்சியார் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சீனுவாச படையாட்சியாருக்கு கடலுாரில் சிலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, மஞ்சக்குப்பத்தில் உள்ள த.மா.கா., அலுவலகம் முன் மாவட்ட பொதுச்செயலாளர் குணசீலன், மாவட்ட துணை தலைவர் சாம்பசிவம் ஆகியோர் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கடலுார் பூண்டியாங்குப்பத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சீனுவாச படையாட்சியார் குடும்பத்தினர் 7 ஏக்கர் நிலம் தானமாக வழங்கினர். மேலும், 3 முறை எம்.எல்.ஏ., வாக இருந்து மக்கள் பணியாற்றியவர் மற்றும் பல சமூக சேவைகளை செய்த சீனுவாச படையாட்சியாருக்கு கடலூரில் சிலை அமைக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். பின், தாங்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.