/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடி வாக்காளர்களுக்கு பா.ம.க., நிர்வாகி சுரேஷ் நன்றி
/
திட்டக்குடி வாக்காளர்களுக்கு பா.ம.க., நிர்வாகி சுரேஷ் நன்றி
திட்டக்குடி வாக்காளர்களுக்கு பா.ம.க., நிர்வாகி சுரேஷ் நன்றி
திட்டக்குடி வாக்காளர்களுக்கு பா.ம.க., நிர்வாகி சுரேஷ் நன்றி
ADDED : ஜூன் 08, 2024 05:44 AM

விருத்தாசலம்,: கடலுார் லோக்சபா தேர்தலில் பா.ம.க., வேட்பாளருக்கு வாக்காளித்தவர்களுக்கு, திட்டக்குடி தொகுதி பொறுப்பாளர் சுரேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
பா.ம.க., மாநில இளைஞர் சங்க செயலாளரும், திட்டக்குடி சட்டசபை தொகுதி பொறுப்பாளருமான டாக்டர் இ.கே.சுரேஷ் பேட்டி: கடலுார் லோக்சபா தொகுதியில் பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆசியுடன் தங்கர்பச்சான் வேட்பாளராக போட்டியிட்டார்.
திட்டக்குடி சட்டசபை தொகுதியில் பா.ம.க., அனைத்து நிலை நிர்வாகிகள், தொண்டர்கள், வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் பா.ஜ., உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உழைத்தனர்.
அதன்படி, திட்டக்குடி சட்டசபை தொகுதியில் 23 ஆயிரத்து 806 ஓட்டுகள் பா.ம.க., பெற்றுள்ளது. பா.ம.க., வேட்பாளருக்கு வாக்களித்த அனைத்து நிலை பொறுப்பாளர்கள், கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க., எப்போதும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், வாக்குறுதிகள் மட்டுமே தேர்தலில் முன்வைக்கிறோம். ஆட்சி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் ராமதாஸ், அன்புமணி ஆகியோரது பாதையில் பயணிப்போம்.
வரும் சட்டசபை தேர்தலில் மக்களின் ஆதரவு பா.ம.க.,வுக்கு கிடைக்கும் வகையில் உழைப்போம். என்.எல்.சி., உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்காக போராடும் ஒரே கட்சி பா.ம.க., மட்டுமே என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, ராமதாஸ், அன்புமணி கரத்தை வலுப்படுத்தும் வகையில் மக்களுக்கான பணிகளில் என்றும் பாடுபடுவோம்.