/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களில் கான்கிரீட் வாய்க்கால் இடிந்தது
/
கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களில் கான்கிரீட் வாய்க்கால் இடிந்தது
கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களில் கான்கிரீட் வாய்க்கால் இடிந்தது
கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களில் கான்கிரீட் வாய்க்கால் இடிந்தது
ADDED : ஜூலை 15, 2024 02:28 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுார் ஊராட்சியில் 4.97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் வாய்க்கால் இடிந்து விழுந்தது.
பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுார் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் கிராம ஊராட்சிகள் திட்ட பணிகள் 4லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் குளக்கரை நீர் செல்லும் கான்கிரீட் வாய்க்கால் பணிக்காக கடந்த பிப்ரவரி மாதம் கலெக்டரால் நிர்வாக அனுமதி வழங்கினர்.
அனுமதிக்கு பின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கான்கீரீட் வாய்க்கால் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களில் கான்கிரீட் வாய்க்கால் இடிந்துவிழுந்தது. இதனை அப்பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் தரம் குறைந்த பணியால் அரசு நிதி வீணானது குறித்தும். அதிகாரிகள்,ஒப்பந்தாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.