/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெரியகுப்பத்தில் மந்தமாக நடைபெறும் வி.கே.டி., சாலை பாலம் கட்டுமான பணி
/
பெரியகுப்பத்தில் மந்தமாக நடைபெறும் வி.கே.டி., சாலை பாலம் கட்டுமான பணி
பெரியகுப்பத்தில் மந்தமாக நடைபெறும் வி.கே.டி., சாலை பாலம் கட்டுமான பணி
பெரியகுப்பத்தில் மந்தமாக நடைபெறும் வி.கே.டி., சாலை பாலம் கட்டுமான பணி
ADDED : ஜூலை 15, 2024 02:26 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே பெரியகுப்பத்தில் மந்தமாக நடந்து வரும் வி.கே.டி., பைபாஸ் சாலை உயர்மட்ட பாலப்பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரவாண்டி-தஞ்சாவூர் பைபாஸ் சாலை பணி சேத்தியாதோப்பு பகுதியில் பின்னலுார் வயல்வெளி பகுதியில் துவங்கி பால்பண்ணை, ஆணைவாரி, மேட்டுத் தெரு, பெரியகுப்பம், சின்னகுப்பம், வெள்ளாறு, மழவராயநல்லுார், குமாரக்குடி வரை செல்கிறது.
இந்த சாலையில் பின்னலுார் வாலாஜா ஏரி முகப்பு பாசன வாய்க்கால் பாலம், சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பால்பண்ணை அருகே , பெரியகுப்பம் ஆகிய மூன்று இடங்களில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.
சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பால்பண்ணை அருகே உள்ள உயர்மட்ட பாலம் 100 சதவீத பணிகள் முடிந்து போக்குவரத்திற்கு தயார் நிலையில் உள்ளது. பின்னலுார் உயர்மட்ட பாலம். பெரியகுப்பம் உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.
இதனால் வாகனங்கள் பின்னலுாரிலிருந்து சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு, சேத்தியாத்தோப்பு, அள்ளூர், பூதங்குடி வரை 6 கிலோ மீட்டர் துாரம் வரை சென்று குமாரக்குடி வந்து வி.கே.டி.,சாலையில் செல்கின்றன.
இதனால் வாகனங்கள் காலதாமதமாகவும், குறித்த நேரத்திற்கு செல்லமுடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மந்தமாக நடைபெற்று உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணிகளை நகாய் அதிகாரிகள் பெரியகுப்பம், பின்னலுார் ஆகிய இடங்களில் நேரடி ஆய்வு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.