/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனைவி, நண்பருக்கு கத்தி குத்து; வாலிபருக்கு போலீஸ் வலை
/
மனைவி, நண்பருக்கு கத்தி குத்து; வாலிபருக்கு போலீஸ் வலை
மனைவி, நண்பருக்கு கத்தி குத்து; வாலிபருக்கு போலீஸ் வலை
மனைவி, நண்பருக்கு கத்தி குத்து; வாலிபருக்கு போலீஸ் வலை
ADDED : ஜூன் 29, 2024 06:05 AM
செஞ்சி : மனைவி மற்றும் நண்பரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டையை சேர்ந்தவர் மூர்த்தி மகன் மணிகண்டன்,31; விவசாயி. இவரும் சிறுநாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த லுார்துசாமி மகன் வினோத்குமார்,28; என்பவரும் நண்பர்கள். வினோத்குமார் நேமூர் கூட்ரோட்டில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை தேவதானம்பேட்டைக்கு வந்த வினோத்குமார், மணிகண்டனிடம் ரூ.1 லட்சம் பணம் கடன் வாங்கினார். பின்னர் இருவரும் மது அருந்தினர். மாலை 4:00 மணிக்கு வினோத்குமார் பஸ் ஏற பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அவரை வழி அனுப்ப மணிகண்டனும் உடனிருந்தார்.
அப்போது அங்கு வந்த வினோத்குமாரின் மனைவி தீபா,25; வினோத்குமாரை தனது ஸ்கூட்டரில் ஏறுமாறு கூறினார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த வினோத்குமார் தான் வைத்திருந்த கத்தியால் தீபாவை குத்த முயன்றார். அதனை தடுக்க முயன்ற மணிகண்டன் கழுத்தில் கத்தி குத்து விழுந்தது. அதன் பிறகும் ஆத்திரமடங்காத வினோத்குமார், தீபாவின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.
அதில் படுகாயமடைந்த மணிகண்டன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமவனையிலும், தீபா முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான வினோத்குமாரை தேடி வருகின்றனர்.