/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உரிய ஆவணங்கள் இல்லாத 2 ஆட்டோக்கள் பறிமுதல்
/
உரிய ஆவணங்கள் இல்லாத 2 ஆட்டோக்கள் பறிமுதல்
ADDED : செப் 13, 2025 09:09 AM
கடலுார் : கடலுாரில் மோட்டார் வாகன ஆய்வாளர் மேற்கொண்ட சோதனையில், அதிக பயணிகளை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடலுார் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் போலீசார் நேற்று மாலை நெல்லிக்குப்பம் சாலை, தலைமை தபால் நிலைய பஸ் நிறுத்தம் உட்பட பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அவ்வழியாக அதிக பயணிகளை ஏற்றி வந்த 10 ஷேர் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், போக்குவரத்து விதிகளை மீறி இயங்கி ஆட்டோக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதமும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கி 2 இரண்டு ஆட்டோக்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 26 ஆயிரம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டது.