/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மதிப்பெண் குறைவு 2 மாணவிகள் தற்கொலை
/
மதிப்பெண் குறைவு 2 மாணவிகள் தற்கொலை
ADDED : மே 16, 2025 11:09 PM

விருத்தாசலம்: தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் சிவானிஸ்ரீ,15; கோ. ஆதனுார் அரசு உயர்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவோம் என நினைத்திருந்த நிலையில் நேற்று வெளியான தேர்வு முடிவில், சிவானிஸ்ரீ 201 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். அதில் விரக்தியடைந்த சிவானிஸ்ரீ வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பூர்
வேப்பூர் அடுத்த ஏ.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கூலித் தொழிலாளி.
இவரது மகள் சுவாதி,16; இவர், வேப்பூர் அடுத்த பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து பொதுத் தேர்வு எழுதினார்.
இவர், 289 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். எனினும், மதிப்பெண் குறைவாக இருந்ததால் மனமுடைந்த சுவாதி வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பேரில் விருத்தாசலம் மற்றும் வேப்பூர் போலீசார் விரைந்த சென்று இரு மாணவிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து தனித்தனியே வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.