/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
33 ஆண்டுகள் மருத்துவ சேவை; டாக்டர் உஷா ரவி பெருமிதம்
/
33 ஆண்டுகள் மருத்துவ சேவை; டாக்டர் உஷா ரவி பெருமிதம்
33 ஆண்டுகள் மருத்துவ சேவை; டாக்டர் உஷா ரவி பெருமிதம்
33 ஆண்டுகள் மருத்துவ சேவை; டாக்டர் உஷா ரவி பெருமிதம்
ADDED : ஜூலை 02, 2025 08:13 AM

கடலுார்; நரம்பு வலிகள் உள்ளிட்ட குறைபாடுகளுக்கு அரோமா பாத சிகிச்சை சிறந்தது என, தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக் தலைமை மருத்துவர் உஷாரவி கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த 33 ஆண்டுகளாக கடலுாரை தலைமையிடமாக கொண்டு புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தி சுசான்லி குழுமம் பாரம்பரிய உடல் நலத்திற்கு பல பணிகளை செய்து கொண்டுள்ளது.
துாக்கமின்மை, நரம்பு வலிகள், சர்க்கரை நோயினால் மரத்து போதல், எரிச்சல், உணர்வு குறைபாடு மற்றும் அடிக்கடி படபடப்பு, அதிகமான வேலை, பல டென்ஷன் என்று 100க்கும் மேற்பட்ட குறைபாடுகளுக்கு அரோமா பாத சிகிச்சை முறை சிறந்ததாகும்.
இது ஒவ்வொருவரின் உடல் நிலைக்கும் ஏற்றவாறு அரோமோ எண்ணெயை தேர்ந்தெடுத்து பாதங்களில் உள்ள சிறப்பு ஊக்க அக்கு புள்ளிகளில் மிதமான அழுத்தம் கொடுத்து செய்யப்படும். பாதங்களில் உள்ள நரம்புகள் உடலின் முக்கிய பகுதியாகும்.
நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்து கொண்டு நம் மூளைக்கு தகவல்களை செலுத்துகிறது. பாதங்களில் உணர்வினை மட்டுமல்லாமல் உடலின் பல்வேறு முக்கிய உறுப்புகளின் செயல் திறனையும் ஊக்குவிக்கிறது.
இவ்வகை நரம்புகள் இரண்டு வகைப்படும். ஒன்று உணர்ச்சி நரம்புகள், மற்றொன்று இயக்க நரம்புகள், உணர்ச்சி நரம்புகள் பாதத்திலிருந்து தகவல்களை மூளைக்கு அனுப்பும். இயக்க நரம்புகள் ஆனது மூளையில் இருந்து பாதங்களுக்கு கட்டளைகளை கொண்டு செல்லும். அனைத்து வகை பிரச்னைகளுக்கும் 14 வகையான இயற்கை வழி சிகிச்சைகளில் அரோமா ரிப்லக்ஸாலஜி தனி கவனம் செலுத்தி புதிய அறிவியல் பூர்வமாக தெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு தி சுசான்லி அக்குபஞ்சர் அன்டு ஆயுர்வேதிக் கிளினிக், எண்- 11, பாரதிதாசன் தெரு. பிள்ளையார் கோவில் எதிரில், மஞ்சக்குப்பம், கடலுார்-1 மற்றும் 93676 22256 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.