/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டின் மீது மரம் விழுந்தது 5 பேர் உயிர் தப்பினர்
/
வீட்டின் மீது மரம் விழுந்தது 5 பேர் உயிர் தப்பினர்
வீட்டின் மீது மரம் விழுந்தது 5 பேர் உயிர் தப்பினர்
வீட்டின் மீது மரம் விழுந்தது 5 பேர் உயிர் தப்பினர்
ADDED : செப் 27, 2025 02:44 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததில், 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் கட்டுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி சகுந்தலா, 55; இவரது வீட்டின் மேல்கூரையாக இரும்பு ஷீட் போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அப்பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
அப்போது, அருகில் இருந்த பழமையான புளிய மரம், சகுந்தலா வீட்டின் மீது திடீரென சாய்ந்தது. சத்தம் கேட்டு திடுக்கிட்ட சகுந்தலா, இளவரசி, மருமகன் பால்ராஜ், 2 பேரன்கள் என, 5 பேரும் அலறினர்.
தகவலறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கிய 5 பேரையும் உயிருடன் மீட்டனர். வீட்டு உபயோக பொருட்கள் சேதமானது.