/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் நடராஜர் கோவிவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பு
/
சிதம்பரம் நடராஜர் கோவிவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பு
சிதம்பரம் நடராஜர் கோவிவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பு
சிதம்பரம் நடராஜர் கோவிவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பு
ADDED : ஜூலை 02, 2025 08:08 AM

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவ தேரோட்டம் நேற்று நடந்தது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்தி வீதியுலாவும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும் நடந்தது.
முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி, காலை 6:00 மணிக்கு சித்சபையில் இருந்து நடராஜர், சிவகாமசுந்திரி, விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.
தொடர்ந்து, 'வா வா நடராஜா, வந்து விடு நடராஜா' என, சிவ, சிவ முழக்கத்துடன் பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுந்தனர்.
தேருக்கு முன்பாக, சிவனடியார்கள், தேவ விற்பன்னர்கள் வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசம் படியபடி சென்றனர். சிவ பக்தர்கள் சிவ வாத்தியங்களுடன் சிவ தாண்டவம் ஆடினர்.
வீதிகளில் மண்டகபடிதாரர்கள் படையல் செய்தனர். மதியம் மேலவீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் முகப்பில் பருவதராஜகுல மரபினர் நடராஜர், சிவகாமி சுவமிகளுக்கு பட்டு சார்த்தி படையல் செய்தனர். இரவு 8:30 மணியளவில், தேர் நிலைக்கு சென்றடைந்தது.
தொடர்ந்து, தேரில் இருந்து சுவாமிகள் கோவிலுக்கு கொண்டு செல்லப்படடு, ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் வைக்கப்பட்டது. பின் அங்கு வீற்றிருக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடந்தது.
விழாவையொட்டி, கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார், சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று நடைபெற உள்ள ஆனிதிருமஞ்சன தரிசன விழாவையொட்டி, அதிகாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடக்கிறது. 10:00 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதியுலா நடக்கிறது. பிற்பகல் 3:00 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனம் நடக்கிறது.
நாளை 3ம் தேதி இரவு பஞ்சமூர்த்தி முத்து பல்லக்கில் வீதியுலாவும், 4ம் தேதி தெப்பல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.