/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூடுதல் கட்டுமான பணி அமைச்சர் கணேசன் ஆய்வு
/
கூடுதல் கட்டுமான பணி அமைச்சர் கணேசன் ஆய்வு
ADDED : செப் 27, 2025 02:42 AM

திட்டக்குடி : திட்டக்குடி அரசு மருத்துவமனையில் ரூ. 5.75 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டட பணியை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.
திட்டக்குடியில் அரசு மருத்துவமனையில் 15 டாக்டர்கள், 17 செவிலியர்கள், 4 மருந்தாளுனர்கள் மற்றும் சித்த மருத்துவ டாக்டர் பணிபுரிகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பிரசவ வார்டுகள் என தனித்தனியே உள்ளன.
மேலும், கொரோனா காலத்தில் துவங்கப்பட்ட வார்டுகள் உள்ளன. மருத்துவமனையில் 96 படுக்கை வசதிகள் உள்ளன.
மருத்துவமனைக்கு 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பெரம்பலுார் மாவட்ட கிராம மக்கள் வந்து காய்ச்சல், பிரசவம், விஷக்கடி, சர்க்கரை, ரத்த அழுத்தம், ஸ்கேன் மற்றும் சித்த மருத்துவத்திற்கும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மருத்துவமனையில் போதுமான கட்டட வசதி இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதைத்தொடர்ந்து, கடந்தாண்டு 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் 5 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கியது.
இப்பணியை, அமைச்சர் கணேசன் ஆய்வு செய்து, கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவு ம் மேற்கொள்ள வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தலைமை மருத்துவர் (பொறுப்பு) சேபானந்தம் உடனிருந்தார்.

