/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கேட்பாரற்று அழுத சிறுவன் தந்தையிடம் ஒப்படைப்பு
/
கேட்பாரற்று அழுத சிறுவன் தந்தையிடம் ஒப்படைப்பு
ADDED : மே 24, 2025 07:03 AM
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கேட்பாரற்று அழுது கொண்டிருந்த சிறுவனை போலீசார் மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர்.
விருத்தாசலம் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு கேட்பாரற்று 4 வயது சிறுவன் அழுது கொண்டிருந்தார். அருகில் இருந்த பயணிகளின் அளித்த புகாரின் பேரில், புறக்காவல் நிலைய போலீசார் சிறுவனை மீட்டு விசாரித்தனர். அதில், அவரது தாய், தன்னை கேட்பாரற்று விட்டுச் சென்றதாகக் கூறி அழுதுள்ளார்.
தகவலறிந்த இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், பஸ் ஸ்டாண்டு, ஜங்ஷன் சாலையில் தீவிரமாக விசாரித்தனர். அதில், ஜங்ஷன் சாலையில் உள்ள டீக்கடையில் பணிபுரியும் சிறுவனின் 40 வயது தந்தையை கண்டறிந்த போலீசார், நள்ளிரவு 3:00 மணிக்கு அவரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
விசாரணையில், கணவன் மீதான கோபத்தில் குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி, குழந்தையை பஸ் ஸ்டாண்டில் தவிக்க விட்டு, தாய் வீட்டிற்குச் சென்றது தெரிந்தது. பின்னர், தந்தையிடம் அறிவுரை கூறி குழந்தையுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.