/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ெஷட் வசதி இல்லாததால் மழையில் வீணாகும் 'தேர்'
/
ெஷட் வசதி இல்லாததால் மழையில் வீணாகும் 'தேர்'
ADDED : பிப் 06, 2024 06:18 AM

நெல்லிக்குப்பம், : திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில், 43 லட்சம் ரூபாய் செலவில் செய்த தேர், நிறுத்த ெஷட் வசதி இல்லாமல் மழையில் நனைந்து வீணாகி வருகிறது.
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் ராஜராஜசோழன் காலத்துக்கு முன் கட்டப்பட்ட ஹஸ்த தாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ராஜராஜசோழன் திருப்பணிகள் செய்ததாக கல்வெட்டு உள்ளது.
இங்கு, ஆனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் தேர் திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது. அதற்காக, தமிழக அரசு சார்பில் 43 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, புதிய தேர் செய்யப்பட்டது. 119 ஆண்டுகளுக்கு பிறகு, 2 ஆண்டுக்கு முன்பு நடந்த பிரம்மோற்சவ விழாவில், புதிய தேரில் சாமி எழுந்தர செய்யப்பட்டு, தேரோட்டம் நடந்தது.
திருவிழா முடிந்ததும் கோவிலுக்கு வெளியே சாலையோரம் திறந்த வெளியில் தேர் நிறுத்தப்பட்டுள்ளது. தேர் நிறுத்த ெஷட் அமைத்து தராததால், கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக மழையில் நனைந்தும் வெய்யிலில் காய்ந்தும் தேர் வீணாகி வருகிறது. எனவே, தேர் வீணாமல் தடுக்க, உடனடியாக ெஷட் அமைத்து, புதிய தேரை பாதுகாக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.