/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காங்கிரசில் எம்.பி., - எம்.எல்.ஏ., அணி விருதையில் தொண்டர்கள் அதிருப்தி
/
காங்கிரசில் எம்.பி., - எம்.எல்.ஏ., அணி விருதையில் தொண்டர்கள் அதிருப்தி
காங்கிரசில் எம்.பி., - எம்.எல்.ஏ., அணி விருதையில் தொண்டர்கள் அதிருப்தி
காங்கிரசில் எம்.பி., - எம்.எல்.ஏ., அணி விருதையில் தொண்டர்கள் அதிருப்தி
ADDED : ஜன 08, 2025 05:28 AM
விருத்தாசலம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., வாக காங்., கட்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் உள்ளார். ஆனாலும், தி.மு.க., வினர் ஆதிக்கமே இங்கு அதிகம். அமைச்சர் கணேசன் ஆதரவாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடலுார் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக காங்., விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றார்.
ஏற்கனவே தி.மு.க., சார்பில் எம்.பி.,யான ரமேஷ் தொகுதி நிகழ்வுகளில் பங்கேற்காதது, கொலை வழக்கில் சிக்கியது என அவப்பெயரே மிஞ்சியது.
இதனால் தொகுதி மக்கள் அதிருப்தியை போக்கும் வகையில் விஷ்ணு பிரசாத் எம்.பி., அவ்வப்போது மாவட்ட நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அதுபோல், என்.எல்.சி., விவகாரம் உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளை மத்திய அமைச்சர்களிடம் கொண்டு செல்கிறார்.
இதனால் எம்.பி., ஆதரவாளர்களாக காங்., நிர்வாகிகள் பலர் உருவெடுத்து வருகின்றனர். தற்போது எம்.பி., - எம்.எல்.ஏ., என இரு அணியாக காங்., தொண்டர்கள் பிரிந்து, அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
யாருடன் சென்றால் எதிர்காலம் என தெரியாத நிலையில் அக்கட்சியினர் குழப்பமடைந்துள்ளனர். தமிழகத்தில் காலுான்ற முடியாது என நினைத்த பா.ஜ., அசுர வளர்ச்சி பெற்று வரும் நிலையில், மாநிலத்தை ஆண்ட காங்., கட்சி கோஷ்டி பூசலில் சிக்கி சிதறுவது அக்கட்சி தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.