/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் ஆலோசனை கூட்டம்
/
அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் ஆலோசனை கூட்டம்
அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் ஆலோசனை கூட்டம்
அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 19, 2025 04:37 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் தொடர்பான ஆலோ சனை கூட்டம் நடந்தது.
ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் செல்வமணி வரவேற்றார். தாசில்தார்கள் உதயகுமார், அந்தோணி ராஜ், தேர்தல் துணை தாசில்தார்கள் முருகேஸ்வரி, சாருலதா, கணினி இயக்குனர்கள் சுரேஷ், அருண்குமார் மற்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அதில், கிராமங்களில் 3 கி.மீ., தொலைவிற்குள் ஓட்டுச்சாவடி மையங்கள் இருக்க வேண்டும். ஓட்டுச்சாவடியில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு குறைகள் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வது குறித்து ஆலோசனை பெறப்பட்டது.