ADDED : செப் 13, 2025 09:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : குடும்பத் தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி அடுத்த கீரப்பாளையம் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. கூலி தொழிலாளி. இவரது மனைவி கயல்விழி,34; தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது.
இதன் காரணமாக கடந்த 28ம் தேதி கயல்விழி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், குடும்பத்தினர் மீட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.