/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி
/
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி
ADDED : மே 20, 2025 10:45 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனுகொடுக்க வந்த விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் அடுத்த திருமாணிக்குழியைச் சேர்ந்தவர் வாசுதேவன்,49. இவர் நேற்று காலை மனைவி தங்கேஸ்வரி, 2 மகள்களுடன், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.
நுழைவுவாயில் முன் மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து காப்பாற்றினர். அதிர்ச்சியடைந்த தங்கேஸ்வரி மயங்கி விழுந்தார். இருவரும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விசாரணையில் 'திருமாணிக்குழி கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன், 2008ம் ஆண்டு நிலப்பட்டாவை அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்து 12,000 ரூபாய் கடன் பெற்றார்.
கடனை திரும்ப வாங்க மறுத்து பட்டாவையும் தராமல் அலைகழித்தார். நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை கோரி இரண்டாவது முறையாக தீக்குளிக்க முயன்றதும்' தெரிந்தது.