sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வனவிலங்கு வேட்டைக்கு சென்ற நான்கு பேர் துப்பாக்கியுடன் கைது

/

வனவிலங்கு வேட்டைக்கு சென்ற நான்கு பேர் துப்பாக்கியுடன் கைது

வனவிலங்கு வேட்டைக்கு சென்ற நான்கு பேர் துப்பாக்கியுடன் கைது

வனவிலங்கு வேட்டைக்கு சென்ற நான்கு பேர் துப்பாக்கியுடன் கைது


ADDED : செப் 15, 2025 02:51 AM

Google News

ADDED : செப் 15, 2025 02:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்: வேப்பூர் அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், வேப்பூர் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சேப்பாக்கம் அருகே சாலையோரம் நின்றிருந்த 'ஸ்விப்ட்' காரை சோதனை செய்தனர்.

இதில், ஒரு நாட்டு துப்பாக்கி, பால்ரஸ் தோட்டாக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரில் இருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், சேலம் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஏர்வாடியை சேர்ந்த அருள்செல்வன், 43; முருகன், 50; தமிழ்ச்செல்வன், 26; கனகராஜ், 43; என்பது தெரிந்தது. கடந்த 4 ஆண்டுகளாக சேலம், ஆத்துார், வேப்பூர் உள்ளிட்ட வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதும், வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட செல்வது தெரிய வந்தது.

அதையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து, நாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள், காரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us