/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வயலில் இறுதி ஊர்வலம் சிதம்பரம் அருகே அவலம்
/
வயலில் இறுதி ஊர்வலம் சிதம்பரம் அருகே அவலம்
ADDED : ஜூன் 06, 2025 08:15 AM

சிதம்பரம்,; காட்டுமன்னார்கோவில் அருகே, சுடுகாட்டு பாதை இல்லாததால் இறந்த முதியவர் உடலை வயல் வழியாக கடந்து சென்று அடிக்கம் செய்த அவலம் அரங்கேறியது.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த குருங்குடி, வடக்கு தெருவில் சுமார் 70 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகளாக சுடுகாட்டு பாதை இல்லை. இதன் காரணமாக, இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
வயல்வெளி வழியாகத் தான் சடலங்களை கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதே பகுதியைச் சேர்ந்த முதியவர் அரசன் நேற்று முன்தினம் இறந்தார். இவரது உடலை நேற்று காலை கிராமத்தினர் 500 மீட்டர் துாரம், நெல் வயல் மற்றும் முட்புதர்களின் வழியாக உடலை சுமந்து சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் சுடுகாட்டு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.