ADDED : செப் 18, 2025 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; மங்கலம்பேட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் உளுந்து பயிருக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.
மங்கலம்பேட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், 2025 - -26ம் ஆண்டிற்கான தேசிய நீடித்த வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணை ப யனாளிகளுக்கு உளுந்து பயிர் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது .
கடலுார் வேளாண் இணை இயக்குநர் லட்சுமிகாந்தன் பயனாளிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். துணை வேளாண் அலுவலர் வெங்கடேசன், உதவி அலுவலர் ரிச்சர்டு, பயிர் அறுவடை பரிசோதகர் வசந்தகுமார் உடனிருந்தனர்.