/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெயப்பிரியா சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
ஜெயப்பிரியா சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பிளஸ் 2 தேர்வில் சாதனை
ஜெயப்பிரியா சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பிளஸ் 2 தேர்வில் சாதனை
ஜெயப்பிரியா சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 15, 2025 02:48 AM

மந்தாரக்குப்பம்:விருத்தாச்சலம் ஜெயப்பிரியா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் 5 மாவட்டங்களில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்தனர். சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர் நிகில் 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
பிளஸ் 2 தேர்வில் உயிரியல் - கணிதப்பிரிவில் 489 மதிப்பெண்கள் பெற்று லக்ஷனா என்ற மாணவி முதலிடமும், ஜே. இ ., மெயின் தேர்வில் 98.8 சதவீதம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மாணவி தாரிகா 488 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், ரோஷினி 485 பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ், கணிதம், வேதியியல், அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
5 மாவட்டங்களில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர் ஜெயசங்கர் விருதுகள் வழங்கி, பணமாலை, பொன்னாடை அணிவித்து பாராட்டினார். பள்ளி இயக்குநர் தினேஷ் வாழ்த்துரை வழங்கினார்.
வடக்குத்து பள்ளி செயலாளர் சிந்து, பள்ளி முதல்வர்கள் நித்யா, பிந்து நாயர், ஸ்ரீ பாலா உள்ளிட்டோர் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.