/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காமாட்சியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
/
காமாட்சியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 04, 2025 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் முதுநகர் காமாட்சியம்மன் கோவிலில், நாளை காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
கடலுார் முதுநகர் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 2ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கோ பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்துவருகிறது. நாளை காலை 7மணிக்கு கடங்கள் புறப்பாடாகி மகா கும்பாபிஷேகமும், 8.15மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 5மணிக்கு மகா அபிஷேகம், இரவு அம்மன் திருவீதியுலா நடக்கிறது.