/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துப்பாக்கிச்சூடு சம்பவம் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு
/
துப்பாக்கிச்சூடு சம்பவம் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு
துப்பாக்கிச்சூடு சம்பவம் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு
துப்பாக்கிச்சூடு சம்பவம் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு
ADDED : ஜூன் 17, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : சோளிங்கர் வழக்கறிஞர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, கொலை செய்யப்பட்டதை கண்டித்து, விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் சக்கவர்த்தி, சமூக விரோதிகளால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் விருத்தாசலத்தில் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் போது, வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டுமென, வலியுறுத்தினர்.