/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு அமைச்சர் கணேசன் பங்கேற்பு
/
ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு அமைச்சர் கணேசன் பங்கேற்பு
ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு அமைச்சர் கணேசன் பங்கேற்பு
ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு அமைச்சர் கணேசன் பங்கேற்பு
ADDED : ஜூலை 03, 2025 11:18 PM

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழாவில், அமைச்சர் கணேசன் குத்து விளக்கேற்றினார்.
சிறுபாக்கம் அடுத்த ஒரங்கூரில் 1. 20 கோடி ரூபாய் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனையொட்டி சுகாதார நிலையத்தில் நடந்த விழாவில், அமைச்சர் கணேசன் குத்துவிளக்கேற்றி, கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பெட்டகம் வழங்கினார்.
பின், அவர் பேசுகையில், 'கிராம மக்களுக்கும் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.
தி.மு.க., அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் பின் தங்கிய கிராமங்களில் சாலை, பஸ், சுகாதாரம் உட்பட மக்களின் அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது' என்றார்.
விழாவில், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், சப் கலெக்டர் விஷ்ணுபிரியா, தாசில்தார் செந்தில்வேல், மங்களூர் பி.டி.ஓ.,க்கள் முருகன், சண்முக சிகாமணி, அரசு வட்டார மருத்துவ அலுவலர் திருமால்வளவன், முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் உட்பட பலர் பங்கேற்றனர்.