/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராசியான திட்டக்குடி சட்டசபை தொகுதி ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகும் அமைச்சர்
/
ராசியான திட்டக்குடி சட்டசபை தொகுதி ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகும் அமைச்சர்
ராசியான திட்டக்குடி சட்டசபை தொகுதி ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகும் அமைச்சர்
ராசியான திட்டக்குடி சட்டசபை தொகுதி ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகும் அமைச்சர்
ADDED : ஜூலை 02, 2025 07:12 AM
கடலுார் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது திட்டக்குடி தனி தொகுதி. சுதந்திர இந்தியாவில் 1952ல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் இருந்தது. 1957, 1962 பொதுத்தேர்தல்களில் நல்லுார் தொகுதியாகவும், 1967 முதல் 2006 வரை மங்களூர் தனி தொகுதியாகவும் இருந்தது.
கடந்த 2009ல் நடந்த தொகுதி மறுசீரமைப்பில் சில மாற்றங்களுடன் திட்டக்குடி தனி தொகுதி உருவானது. அதில் மங்களூர் தொகுதியாக இருந்த போது தற்போதைய எம்.எல்.ஏ., கணேசன் 4 முறை போட்டியிட்டு 2 முறை வெற்றிபெற்று பதவி காலத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையே இருந்தது.
ஆனால் திட்டக்குடி தொகுதியாக மாற்றம் பெற்ற பின் 2 முறை போட்டியிட்டு, 2 முறையும் வெற்றிபெற்று, அமைச்சர் பதவியையும் பெற்றுத்தந்த ராசியான தொகுதியாக மாறிவிட்டது.
ராசியில்லாத மங்களூர் தொகுதி
கடந்த 1989 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,சார்பில் மங்களூர் தொகுதியில் முதன்முறையாக களமிறங்கிய கணேசன், அ.தி.மு.க., வேட்பாளர் ராமலிங்கத்தை தோற்கடித்து வெற்றி பெற்றார். அதன்பின் நடந்த ஆட்சி கலைப்பால் பதவியை பறிகொடுத்தார்.
ராஜிவ்காந்தி இறப்புக்குப்பின் நடந்த 1991 தேர்தலில் மங்களூர் தொகுதியில் இரண்டாம் முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2001ல் தி.மு.க., கூட்டணியில் வெற்றிபெற்ற திருமாவளவன், கருத்து வேறுபாடு காரணமாக பதவியை ராஜினாமா செய்ததால் மங்களூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு கணேசன் வெற்றிபெற்றார். அதிலும் முழுமையான பதவிக்காலத்தை அனுபவிக்க முடியவில்லை. 2006ல் நான்காம் முறையாக போட்டியிட்டு வி.சி.,வேட்பாளர் செல்வத்திடம் தோல்வியைத் தழுவினார்.
ராசியான திட்டக்குடி தொகுதி
அதன்பின் தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் திட்டக்குடி தொகுதியாக மாற்றம் பெற்று, 2011ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க.,கூட்டணியில் தே.மு.தி.க.,வேட்பாளர் தமிழழகன் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.,ஆனார். வி.சி.,சிந்தனை செல்வன் தோல்வியைத்தழுவினார்.
அதன் பின் நடந்த 2016 மற்றும் 2021 சட்டசபை தேர்தல்களில் தி.மு.க.,வில் கணேசன் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார். 2021ல் வெற்றி பெற்ற கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.
வரும் 2026 சட்டசபை தேர்தலிலும், கணேசன் அதே தொகுதியில் போட்டியிடும் சூழல் நிலவுவதால் இம்முறையும் வெற்றி பெற தயாராகி வருகிறார். அப்படி வெற்றிபெற்றால் ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் என உடன்பிறப்புகள் உற்சாகத்துடன் உள்ளனர்.