/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழில் பெயர் பலகை விபாபாரிகள் ஆலோசனை
/
தமிழில் பெயர் பலகை விபாபாரிகள் ஆலோசனை
ADDED : ஜூன் 10, 2025 06:59 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்து வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
செயல் அலுவலர் மயில்வாகனன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், பரங்கிப்பேட்டை வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தமிழில் பெயர் பலகை வைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், நிர்வாகிகள், சாலிஹ் மரைக்காயர், அய்யப்பன், சக்திவேல், ரமேஷ், தாஜுதீன், புருஷோத்தமன் உட்பட பலர பங்கேற்றனர்.
வர்த்தக சங்க செய்தி தொடர்பாளர் ரமேஷ், நன்றி கூறினார்.