/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
/
என்.எல்.சி., தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
என்.எல்.சி., தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
என்.எல்.சி., தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
ADDED : ஜூன் 13, 2025 03:47 AM

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி., நிர்வாகத்திடம் ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கினர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 2ல் உள்ள ரவுண்டானாவில் இருந்து நேற்று மாலை 6:30 மணிக்கு ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் சீருடை மற்றும் ஹெல்மெட் அணிந்து வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்க என்.எல்.சி., தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.
இவர்களை டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டக்குழு தலைவர் சேகர் தலைமையிலான 5 பேரை மட்டும் போலீசார் என்.எல்.சி., தலைமை அலுவலகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர்.
பின், போராட்டக்குழுவினர் என்.எல்.சி., மனிதவளத்துறை அதிகாரிகளிடம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கினர்.
இதுகுறித்து சங்க மாவட்ட செயலாளர் சேகர் கூறுகையில், 'என்.எல்.சி.,யில் பணிபுரியும் ஒப்பந்தம் மற்றும் சொசைட்டி தொழிலாளர்களுக்கு சென்னை ஐகோர்ட் தீர்ப்பின்படி, பிரசனைகளுக்கு காலக்கெடு நிர்ணயித்து தீர்வு காண வேண்டும்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென, வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கி உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் என்.எல்.சி., ஒப்பந்தம் மற்றும் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் அனைவரும் 15 நாட்களுக்குள் கடலுார் தலைமை தபால் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைப்போம்' என்றார்.