/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் கவர்னருக்கு எதிராக 'கெட் அவுட் ரவி' என போஸ்டர்
/
கடலுாரில் கவர்னருக்கு எதிராக 'கெட் அவுட் ரவி' என போஸ்டர்
கடலுாரில் கவர்னருக்கு எதிராக 'கெட் அவுட் ரவி' என போஸ்டர்
கடலுாரில் கவர்னருக்கு எதிராக 'கெட் அவுட் ரவி' என போஸ்டர்
ADDED : ஜன 08, 2025 01:47 AM

கடலுார்:தமிழக சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பங்கேற்ற கவர்னர் ரவி, தன் உரையை வாசிக்காமல் சட்டசபையை விட்டு வெளியேறினார். கவர்னரின் இச்செயலை கண்டித்து, தி.மு.க.,வினர் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், கவர்னருக்கு எதிராக கடலுார் நகரில் பல இடங்களில் ஆங்கிலத்தில் 'கெட் அவுட் ரவி' என, போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், 'தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநர். அவரை காப்பாற்றும் அ.தி.மு.க., - பா.ஜ., கள்ளக் கூட்டணி' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும், 'சார் நான் கோஷம் போடுற மாதிரி போடுறேன். நீங்க நேக்கா வெளிய போய்டுங்க' என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. கவர்னரை பார்த்து கூறுவது போலவும், கவர்னர் ரவி 'சூப்பர்யா நீதான்யா உண்மையான விசுவாசி' என கூறுவதாக வாசகங்கள், அவர்களின் படங்களுடன் இடம் பெற்றுள்ளன.
தலைமை செயலக போட்டோவும், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின் படங்களும் உள்ளன. இந்த போஸ்டரை அச்சிட்டவர் பெயர், விபரம் ஏதும் இல்லை. கடலுாரில் கவர்னருக்கு எதிராக ஒட்டப்பட்ட இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.