ADDED : ஜூலை 01, 2025 01:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : பண்ருட்டியில் நடந்த பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில், பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் பங்கேற்றார்.
கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி பண்ருட்டி தென்மேற்கு மண்டல் பூத் எண்.16ல் மண்டல் தலைவர் ரஞ்சித்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் தாமோதரன் முன்னிலையில் நடந்தது.
பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளரும், நெய்வேலி தொகுதி பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின் பொறுப்பாளருமான வினோத் ராகவேந்திரன் நிகழ்ச்சியை பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கு ஏறபாடு செய்த கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தியை பாராட்டினார்.