/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பி.டி.ஓ., அதிரடி டிரான்ஸ்பர்; ஊரக வளர்ச்சி துறையில் 'பீதி'
/
பி.டி.ஓ., அதிரடி டிரான்ஸ்பர்; ஊரக வளர்ச்சி துறையில் 'பீதி'
பி.டி.ஓ., அதிரடி டிரான்ஸ்பர்; ஊரக வளர்ச்சி துறையில் 'பீதி'
பி.டி.ஓ., அதிரடி டிரான்ஸ்பர்; ஊரக வளர்ச்சி துறையில் 'பீதி'
ADDED : ஜூன் 04, 2025 09:01 AM
விருத்தாசலம் ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளில் குடிநீர், சாலை, மின் விளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வாயிலாக நிறைவேற்றப்பட்டன. சமீபத்தில் ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் முடிந்ததால், பி.டி.ஓ.,க்கள் இருவரின் மேற்பார்வையில் அந்தந்த ஊராட்சி செயலர்கள்ச பணிகளை கவனித்து வருகின்றனர்.
மேலும், நுாறு நாள் திட்டப் பணிகள் உட்பட கிராமங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளையும் தினசரி ஆய்வின் மூலம் பி.டி.ஓ.,க்கள் கண்காணித்து வருகின்றனர். இதனை ஜி.பி.எஸ்., மற்றும் கூகுள் மேப் மூலம் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிது.
இந்நிலையில், கலைஞர் கனவு இல்லத் திட்டம் உட்பட பல்வேறு வீடு கட்டும் திட்டப் பயனாளிகளிடம் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பணியாணை பெறவும் மற்றும் சிமென்ட், கம்பி போன்ற கட்டுமான பொருட்களை வழங்கவும் தனித்தனியே லஞ்சம் பெறுவதாக கலெக்டர், கூடுதல் கலெக்டர் ஆகியோருக்கு புகார்கள் பறந்தன.
இதற்கிடையே பெண் பி.டி.ஓ.,வை, கம்மாபுரம் ஒன்றியத்திற்கு அதிரடியாக இடமாறுதல் செய்து, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் எந்த குற்றச்சாட்டில் பெண் பி.டி.ஓ., இடமாறுதல் செய்யப்பட்டார் என தெரியாமல், விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு நிலவுகிறது. இந்த சம்பவம், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.