ADDED : அக் 24, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:  கடலுாரில் கடை முன்பு நிறுத்தியிருந்த   வாகனம் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுார் அடுத்த கோண்டூரைச் சேர்ந்தவர் ரகுபதி,29;  இவருக்குச்சொந்தமான சரக்கு வாகனத்தை கடந்த 21ம் தேதி இரவு, சாவடி ஜங்ஷன் பகுதியிலுள்ள மீன் கடை முன்பு நிறுத்திவிட்டுசென்றார்.  அடுத்த நாள்  காலை வந்து பார்த்தபோது சரக்கு வாகனத்தை காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

